இலங்கைக்கு இலகு வெற்றி

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் இன்று (18.01) மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ப்ரையன் பென்னெட் 29(12) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும், அஞ்சலோ மத்தியூஸ், மஹீஷ் தீக்ஷண ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 10.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 88 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 39(23) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 33(27) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சீன் வில்லியம்ஸ் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

இந்த போட்டியின் நாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தொடரின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply