Zimbabwe கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்!

Zimbabwe கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் தமது 49வது வயதில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

1990 முதல் 2000ம் ஆண்டு வரை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹீத் ஸ்ட்ரீக்.

இதுவரையில் Zimbabwe அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 4933 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 455 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

அதன் பின்னர் 2005-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ட்ரீக், பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இவரது மறைவிற்கு பல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply