மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்..!

மாத்தறை – தெலிஜ்ஜவில மாலிம்பட பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதன்போது பயன்படுத்தப்பட்ட உந்துருளி மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை – பண்டத்தர பகுதிக்கு அருகில் விட்டுச் சென்றிருந்த நிலையில், குறித்த உந்துருளி மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு குறித்த பகுதியிலுள்ள கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையமொன்றுக்கு, உந்துருளியில் வருகைத்தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளமை பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான 21 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply