விஸ்வ புத்த எனும் பெயரில் பௌத்த மதத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த நபர்; கங்கொடவில நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மீறி அவர் செயற்பட்டமையினால் சந்தேகநபரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.