தேவையான அளவு அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில், நாட்டிற்குள் அதிகளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.