காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த தனியார் பேருந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது, அதன்போது வெளிநாட்டவர்கள் இருவரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மிதிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.