நாட்டின் பல பகுதிகளிலும் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply