நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டில் மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திகதி நிர்ணயித்துள்ளது.
பிரதிவாதியான சனத் நிஷாந்த தற்போது உயிருடன் இல்லை என்பதால், அவமதிப்பு மனுக்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு குறித்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.