தேசிய கொடிகளால் அழகு பெறும் மட்டக்களப்பு மாவட்டம்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் (04.02) திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கம் அவர்களின் வழி நடாத்தலில் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடிப் பாலம் உள்ளிட்ட கல்லடி வரையிலான பிரதான வீதி உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு மின் குமிழ்களிலான அலங்கார வேலைகளும் இடம்பெற்று வருகின்து.


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் சுதந்திரதினத்தன்று மாலை 6.30 மணிக்கு பழைய கல்லடி பாலத்தில் கடைத்தொகுதிகள் மற்றும் உணவுத் திருவிழா உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply