10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் வத்தளை பகுதியில் மீட்பு!

கம்பஹா மாவட்டம் எண்டேரமுள்ள அப்புகேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து 1,92,000 மாத்திரைகள் கைப்பற்றபட்டுள்ளதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி குறித்த வீடு சோதனையிடப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த போதைப் பொருட்கள், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு பாரியளவில் விற்பனை செய்வதற்காக அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply