சகல சிசு சரிய பஸ்களும் திங்கட்கிழமை (22.11.2021) முதல் சேவையில் ஈடுபடுமென தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் தரம் 6 முதல் 9 வரையான தரங்கள் ஆரம்பிக்கப்படும் நிலையில் மாணவர்களின் வரவை முன்னிட்டு அவர்களது நலன்கருதி சிசு சரிய பஸ் சேவையினை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவையேற்படின் கூடுதல் பஸ்களை பெறுவதற்கு பிராந்திய டிப்போ மேலாளர்களை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
