அமெரிக்க இராஜாங்க திணைக்களம் – எம்.ஏ சுமந்திரன் சந்திப்பு

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவினரோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அறியமுடிகிறது.

இதில் உலக தமிழ் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் போது நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் இலங்கையின் சிறுபான்மை குழக்களின் முந்நோக்கு, கவலைகள் மற்றும் இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் - எம்.ஏ சுமந்திரன் சந்திப்பு

Social Share

Leave a Reply