அபாயகரமிக்க வீதிகளை கண்டறிய பணிப்புரை

நாட்டின் சகல பகுதிகளிலும் மண்சரிவு அபாயமிக்க நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மூலம் கண்டறியுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வீதிகள் சில நிர்மாணிக்கப்பட்டிருந்தும் பல வருடங்களாகியுள்ள நிலையில் அவை மண்சரிவு அபாயமுள்ள வீதிகளா என்பது தொடர்பில் முறையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் மற்றும் வீதி அதிகார சபை அதிகாரிகள் இணைந்து அபாயகரமிக்க வீதிகள் தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அபாயகரமிக்க வீதிகளை கண்டறிய பணிப்புரை

Social Share

Leave a Reply