இரத்தினபுரியில் அசிட் தாக்குதல் – ஐவர் காயம்

இரத்தினபுரியில் நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட அ சிட் தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மேல் நீதிமன்ற கட்டிட வளாகத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள பாதசாரி கடவைக்கு அருகில் நேற்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகன விபத்தொன்றில் உயிரிழந்த நபரின் தந்தையால் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது அசிட் திரவம் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அசிட் திரவத்தை வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Social Share

Leave a Reply