கடனுதவிக்கு அனுமதி வழங்க உத்தரவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

வட்டியில்லா கடன் திட்டத்தின் 7 ஆவது பிரிவின் கீழ், கே.ஐ.யு. தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியோ அல்லது தேசிய சேமிப்பு வங்கியோ கடனுதவி வழங்குவதற்கு இதுவரை இணங்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07.10) மீண்டும் பாராளுமன்றத்தில் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சரின் தலையீட்டினால் பிள்ளைகள் கற்கை நெறிகளை ஆரம்பித்துள்ளனர், என்றாலும் கடனுதவி கிடைக்காத காரணத்தினால் கற்கையை பாதியில் நிறுத்த நேரிடும் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த கடனுதவிக்கு அனுமதி வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply