“பெண்களின் சாதனைகள் அளப்பறியது” – ஜீவன் தொண்டமான்

உங்கள் பலம், தைரியம் மற்றும் கருணை உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் தொடரட்டும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகள் அளப்பறியது. அவற்றை எண்ணி நாங்கள் வியக்கிறோம், மதிக்கிறோம். முன்னேற்றம், சமத்துவம் என்பது பொதுவானது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் வருகின்றனர் என்ற காலம் மாறி, ஒருவருக்கொருவர் சமம் என்ற நிலை வந்துவிட்டது. இந்த மாற்றம் உலகம் முழுவதும் வரட்டும், வளரட்டும்.

Social Share

Leave a Reply