பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா கௌரவிப்பு!

தமிழ் சினிமாவின், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் தமிழ் மொழி மட்டுமன்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் சிங்கள மொழியிலும், இதுவரையில் 18 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார்.

அவருடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் சரளமாக பேசக்கூடிய திறன் கொண்டவர்.

திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 21-வது பட்டமளிப்பு விழாவில், பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply