வெள்ளவத்தை பகுதியில் தோன்றிய பாரிய பள்ளம்!

காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதியில் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக மூடப்பட்டுள்ளது.

சுமார் 4 அடி விட்டம் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக காலி வீதியூடாக கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் மெரின் டிரைவ் வீதியூடாக கொழும்பு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply