பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த வாரம் 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்ப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் முட்டையொன்றினை 43 ரூபாவிற்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதிக்கான அனுமதி இறக்குமதியாளர்களிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.