இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடி குற்றச்சாட்டில் கடந்த 09 ஆம் திகதி 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது மீனவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டன .
குறித்த 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது