நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(13) தொடர்கின்றது.
சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி நேற்று(12) முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைத்தலைவர் தம்மிக S.ப்ரியந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து பல்கலைகழகங்களுக்கு முன்பாகவும் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.