X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

X-Press Pearl கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரி அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்புறுதி பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு லண்டன் நீதிமன்றம் வரையறைகளை விதித்துள்ளமையினால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கப்பலின் காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு காப்புறுதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை காப்புறுதி நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் வர்த்தக மேல் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply