நாடளாவிய ரீதியில் இன்று வறட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கிலிருந்து வீசுவதுடன், மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கிலிருந்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காற்றின் வேகம் மணிக்கு 15-30 கிலோ மீற்றர் வரை இருக்கும் வீசக்கூடும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.