பேராதனை கொப்பேகடுவ சந்தியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாட்டிற்காக பக்தர்களுடன் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுகுறித்த பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.