இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பங்களாதேஷ் சொட்டகிராம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஜனித் லியனகேவின் கன்னி சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சரித் அசலங்கா 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.