வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19.03) பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவராத்திரி தினதன்று ஆதிசிவன் கோயிலில் கைதானவர்களின் வழக்கு விசாரணை இன்று (19.03) வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் கைதானவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அது நிறைவேறாமை, தமிழ் எம்.பிக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று (19.03) காலை பாராளுமன்றத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.