சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு திகதியை வழங்குவதற்குநாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.