உள்ளூர் சந்தையில் முட்டை விலையை நிலையாகப் பேணுவதற்காக ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது 18 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், விழாக் காலங்களின் தேவைகளுக்கு மேலும் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த முட்டை தொகையை இறக்குமதி செய்வதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய நிறுவனத்திடமிருந்து விலைமனுக் கோரப்பட்டுள்ளது.