இந்திய திரைப்பட இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவுள்ள திரைப்படத்தில், இசைஞானியாக பிரபல நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தினை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக, சினிமா வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷ் ஆகியோர் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், நாளை இந்த திரைப்படம் தொடர்பில் அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.