ஆரம்பமாகியது புதிய அரசியல் கூட்டணி…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று நேற்று(20) ஆரம்பிக்கப்பட்டது. 

‘மனிதநேய மக்கள் கூட்டணி’ பெயரிடப்பட்டுள்ள இந்த அரசியல் கூட்டணியில், சுமார் 20 அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 10 வருடங்களுக்கு தெளிவான இலக்குகளையும் மற்றும் பயனுள்ள திட்டத்தையும் கொண்ட அரசியல் கட்சியொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை  தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். 

உறவுமுறை ஆட்சியை ஆதரிக்காத, தூய்மையான அரசியலில் ஈடுபடும் ஆட்சியாளர்களின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply