இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கர் வீட்டில் இன்று(21) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றதுடன் தொடர்புடைய வழக்கில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கபடுகின்றது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தடையை மீறி குட்கா விற்க லஞ்சம் பெற்ற வழக்கில் ஏற்கெனவே விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது அந்நாட்டு குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த காலங்களில் அவருடைய வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், அவரது சொத்துகளையும் முடக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.