சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று (21) 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு இடம் பெற்றது.