வவுனியாவில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி நேற்றைய தினம் ஆசிரியரிடம் கூறியதையடுத்து வுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தாய் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply