மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை..!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்படும் மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறையாக நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 8 மாதங்களாக குறித்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் இந்த தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply