கொழும்பு – வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடையகத்தில் (Nolimit) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு 07 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து காலி வீதியின் ஒரு பக்கம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை..