புதிய தேர்தல் முறைமைக்கு  இடமளிக்கமாட்டோம்… 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புதிய பாராளுமன்ற தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தேசியத் தேர்தலைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கனடாவின் ரொறன்ரோவில் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படும் பட்சத்தில், பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ள இயலாது என்பதினால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பசில் ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் முயற்சித்து வருவதாக  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலமைப்பிற்கமைய எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply