மாணவர் ஒருவர் திடீர் மரணம் – களனி பல்கலைக்கழகத்தில் போராட்டம் 

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் சுகவீனத்தினால் உயிரிழந்தமை தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

களனி பல்கலைக்கழகத்தில் நான்காம் வருடத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளார். 

குறித்த மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு  அம்பியூலன்ஸ்   வசதியோ அல்லது ஏனைய வாகனங்களோ பல்கலைக்கழக வளாகத்தினுள் இல்லாத காரணத்தினால், தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

Social Share

Leave a Reply