அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலில் பாரளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பசில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை என அரசியல் வட்டாரங்களை மேற்கொள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு அமைச்சரவை கூட்டங்களின் போதும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திசாநாயக்கவும் களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்கள் எவரும் களமிறங்கமாட்டார்கள் எனவும், குறித்த கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.