மருந்துகளுக்கு தட்டுப்பாடு -மருத்துவ வழங்கல் பிரிவு

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி,மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படாத பலவேறு மருந்துகள் இதில் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் G.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளுக்கான மாற்று மருந்துகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply