ஹர்ஷ  டி சில்வாவிற்கு விடுக்கப்பட்ட விசேட அழைப்பு…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் கதவுகள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களுக்கும் எப்போதும் திறந்திருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும், மீண்டும் கட்சியில் இணைந்துக் கொள்ளுமாறு அவர் அழைப்புவிடுப்பதாக நேற்று(26) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், குறித்த கட்சியின் தலைமையினால்  ஓரங்கட்டப்படுவதுடன்,  ஹர்ஷ டி சில்வா போன்றவர்களுக்கு பதிலாக நாலக கொடஹேவா கட்சியின் பொருளாதாரம் சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்வதாக  சுட்டிக்காட்டிய  பாலித ரங்கே பண்டார, ஹர்ஷ  டி சில்வாவிற்கு ஐக்கிய தேசிய கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் தங்களுடைய கட்சிக்கு வருவதற்கு ஆரம்பித்துவிட்டதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் தாம் கலந்துரையாடியதாகவும் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply