ஆபாச காணொளிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய முறை 

சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

இன்று(28) முதல் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள்   தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள “Internet Watch Foundation” எனும் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. 

குறித்த நிறுவனம் ஊடாக இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள ஆபாச காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்தி உரிய குற்றவாளிகளை இணங்கண்டு சர்வதேச பொலிஸின் ஊடாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply