நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 872 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் மாதத்தில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளில் 16 வீதமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 14 வீதமானோர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளாவர்.