மகளிர் கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கான புதிய முயற்சி

மகளிர் கிரிக்கெட் முன்னேற்றுவதற்கான புதிய முயற்சிகொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயத்திற்கு கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பயிற்சி ஆடுகளமொன்று இலங்கை கிரிகெட் சபை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

அண்மையில் திறக்கப்பட்ட பயிற்சி ஆடுகளத்தில், பாடசாலையின் 15 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட அணிகளுக்கான பயிற்சிகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாடசாலையில் கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு வழங்கிய  உதவிகளுக்கு, சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயத்தின் அதிபர் ஜே.சுமேதா ஜெயவீர நன்றிகளை தெரிவித்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பயிற்சி விக்கெட்டை பயன்படுத்தி நல்ல அணியை உருவாக்குவதற்கும், அதனுடாக இலங்கை மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு  எதிர்பார்ப்பதாகவும் பாடசாலையின் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் தலைவி மெத்மி ஆதித்யா தெரிவித்துள்ளார். 

இதன் ஆரம்ப நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பாடசாலை கிரிக்கெட் ஒருங்கிணைப்பாளர் மாரிஸ் டி சில்வா கலந்து கொண்டிருந்தார்.  

Social Share

Leave a Reply