இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18 வீதம் முதல் 20 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
இதற்கு டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் 05 லட்சத்து 15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 pro max தற்போது 03 லட்சத்து 75 ஆயிரத்து ரூபா வரை குறைவடைந்துள்ளது.
இதேவேளை 10 ஆயிரம் ரூபா வரை அதிகரித்திருந்த கையடக்கத் தொலைபேசி தற்போது 07 ஆயிரம் ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.