இலங்கையில் எரிபொருள் நுகர்வு 50 வீதம் குறைவடைந்துள்ளது.
பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையே எரிபொருள் நுகர்வு குறைவடைந்தமைக்கான காரணம் என என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது அனைத்து வகையான எரிபொருட்களும் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.