அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு தற்காலிகமான ஜனாதிபதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென மருத்துவப் பரிசோதனைக்காக, வோஷிங்டனில் உள்ள வோவால்டர் ரீட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு அனஸ்தீசியா முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சிகிச்சையிலிருந்து குணமடையும் வரை தனது ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
சிகிச்சையிலிருந்த ஒரு மணித்தியாலம் 25 நிமிடங்கள், தற்காலிக அமெரிக்க ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் என வெள்ளை மாளிகை செய்திகள் ஊடாக அறியமுடிகிறது.