இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இலங்கை,காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி பலமான நிலையில் முதல் நாளை நிறைவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி திமுத் கருணாரட்னவின் சதம் மூலமாக துடுப்பாட்டத்தில் பலமான நிலையினை பெற்றுள்ளது.
திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்கமால் 132 ஓட்டங்களையும், பத்தும் நிசங்க 56 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் 139 ஓட்டங்களை பெற்றனர். தனஞ்செய டி சில்வா ஆட்டமிழ்காமல் 56 ஓட்டங்களை பெற்றுள்ளார். இந்த போட்டியில் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆஞ்செலோ மத்தியூஸ் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஒசாத பெர்னாடோ 3 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்தார்.
ரொஸ்டன் செஸ் 2 விக்கெட்களையும், ஷனோன் கப்பிரியல் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
முந்தைய செய்தியின் பதிவு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட்டின் முதலாவது போட்டி இன்று (21/11) காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகிறது.
அதற்கமைய நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து உள்ளது.