முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வு தேவை – டலஸ் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர், தமது சொந்த நலனுக்காகவும் மக்களுக்காகவும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நபர்களுக்கான செலவிடப்படும் பொது நிதியை, அரசியல் சார்ந்த விடயங்களுக்காக பயன்படுத்தக்கூடாது எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.