முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனத்தை மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் சேமித்த கருப்புப் பணத்தை பிரச்சாரங்களில் பயன்படுத்த முற்படுவது, பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கு தகுந்த காலமாகும் என சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வறான பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனத்தை (CBH 1949) பியூமி ஹன்சமாலி பெற்றுக்கொண்டமை தொடர்பில் சஞ்சய மஹவத்த கேள்வி எழுப்பியுள்ளார்.
பியூமி ஹன்சமாலி, தற்போது அதி சொகுசு வீடொன்றில் வசிப்பதாகவும், அதிகளவு சொத்துக்களை வைத்திருப்பதாகவும் மற்றும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளின் கருப்புப் பணத்துடன் தொடர்புடைய பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகிறரா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்துமாறும் சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.