மியன்மாரில் ஆயுதம் ஏந்திய குழுவிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு

மியன்மார் – தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவொன்றின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான விமானத்தினூடாக அவர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, ஏனைய 48 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.

மியன்மார் – தாய்லாந்து எல்லையில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இளைஞர் மற்றும் யுவதிகள் 56 பேர் தடுத்து வைக்கப்பட்டு கணினி குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply